டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை பேட்டிங் தேர்வு...!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை-டெல்லி அணிகள் மோத உள்ளன.
டெல்லி,
16வது ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் 4 லீக் ஆட்டங்களே எஞ்சியுள்ள நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. பஞ்சாப், ஐதராபாத், டெல்லி அணிகள் பிளே ஆப் சுற்றிலிருந்து வெளியேறி விட்டன.
இந்நிலையில், இன்று 2 முக்கியமான லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. மாலை டெல்லியில் நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு எந்த ஒரு சிக்கலுமின்றி முன்னேறலாம் என்ற நிலையில் சென்னை அணி ஆட உள்ளது.
இந்நிலையில், இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.