பந்துவீச்சில் மிரட்டிய சென்னை அணி..! 158 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை

தொடர்ந்து 158ரன்கள் இலக்குடன் சென்னை அணி விளையாடுகிறது.

Update: 2023-04-08 15:41 GMT

மும்பை,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கின்ற,  12-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் கோதாவில் குதிக்கின்றன.ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-மும்பை மோதல் என்றாலே எப்போதும் அனல் பறக்கும். ரசிகர்களின் ஆர்வமும் எகிறும்

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா , இஷான் கிஷன் களமிறங்கினர் . தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர். ரோகித் சர்மா 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் துஷார் தேஸ்பாண்டே பந்துவீச்சில் வெளியேறினார்.

மறுபுறம் சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் 32 ரன்கள் , அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.இதனால் மும்பை அணி தடுமாறியது.

அடுத்து வந்த கேமரூன் கிரீன் 12 ரன்களும் , திலக் வர்மா 22 ரன்களும் எடுத்து வெளியேறினர். கடைசியில் அதிரடி காட்டிய டிம் டேவிட் 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் மும்பை 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட் , சான்ட் னர் , துஷார் தேஸ்பாண்டே தலா 2 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 158ரன்கள் இலக்குடன் சென்னை அணி விளையாடுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்