சேப்பாக்கத்தில் சென்னை-லக்னோ அணிகள் இன்று மோதல் - ருதுராஜ் கெய்க்வாட் சொன்ன ஒரு வார்த்தை..!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-லக்னோ மோதும் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடக்கிறது.

Update: 2023-04-03 03:57 GMT

சென்னை,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) அரங்கேறும் 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதுகின்றன.

சேப்பாக்கம் மைதானம் சென்னை சூப்பர் கிங்சின் கோட்டையாகும். ஏனெனில் 2019-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் விளையாட இருக்கிறது. ரசிகர்களின் ஆரவாரமும், மெதுவான தன்மை கொண்ட ஆடுகளமும் சென்னை வீரர்களுக்கு நிச்சயம் உத்வேகம் அளிக்கும் என்று நம்பலாம்.

இதனையொட்டி செய்தியாளர்கள் சந்திப்பில் சென்னை அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:-

சேப்பாக்கம் மைதானத்தில் முதல்முறையாக விளையாடப்போவது உற்சாகம் அளிக்கிறது. அணியில் நீண்ட பேட்டிங் வரிசை இருப்பது சுதந்திரமாக பேட்டிங் செய்ய உதவுகிறது. சென்னை அணியின் காம்பினேஷன் சிறப்பாக இருக்கிறது. தொடர் செல்ல செல்ல அணியின் செயல்பாடு மேம்படும். இந்தாண்டு சென்னையுடன் மேலும் நல்ல நினைவுகளை ஏற்படுத்துவேன் என ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்