குரூப் புகைப்படம் எடுத்த கேப்டன்கள்...! ரோகித் சர்மா எங்கே ? மும்பை ரசிகர்கள் அதிர்ச்சி

மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா இல்லாதது மும்பை அணி ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது

Update: 2023-03-30 14:59 GMT

10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன .இந்த போட்டிக்காக அணைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கு முன்பு அனைத்து அணியின் கேப்டன்களும் ஐபிஎல் கோப்பையுடன் புகைப்படம் எடுப்பது வழக்கமான ஒன்று. அதை போன்று இந்த ஐபிஎல் போட்டிக்கான கேப்டன்கள் கோப்பையுடன் உள்ள புகைப்படத்தை ஐபிஎல் வெளியிட்டது. அதில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா இல்லாதது மும்பை அணி ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து டுவிட்டரில் ரோகித்சர்மா ஹேஷ்டேக் டிரென்டாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்