சுப்மன் கில் போன்ற வீரருக்கு பந்துவீசுவது சச்சினுக்கு பந்து வீசுவது போல் இருக்கும் - பாக். முன்னாள் வீரர்

சுப்மன் கில் போன்ற வீரருக்கு பந்துவீசுவது சச்சினுக்கு பந்து வீசுவது போல் இருக்கும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

Update: 2023-06-04 09:33 GMT

Image Courtesy: @IPL

கராச்சி,

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மான தற்போது வளர்ந்து வருபவர் சுப்மன கில். தற்போது இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக திகழ்கிறார். தற்போதையை ஐபிஎல் சீசனிலும் அதிரடியாக ஆடி அதிக ரன் அடித்தவருக்கு கொடுக்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றினார்.

தற்போது தனது கிரிக்கெட்டில் சிறந்த பார்மில் இருக்கும் அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். இந்நிலையில் சுப்மன் கில் போன்ற வீரருக்கு நான் பந்துவீசும் போது சச்சி டெண்டுல்கருக்கு பந்துவீசுவது போல் இருக்கும் என பாகிஸ்தான் அணியின் அதிவேக வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

நான் சுப்மன் கில் போன்ற ஒரு வீரருக்கு பந்து வீசும்போது , அது டி20 கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, அது ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு முதல் 10 ஓவரில் பந்துவீசுவது போல் இருக்கும். ஏனெனில் அப்போது 30 யார்டு வட்டத்திற்கு வெளியே 2 பீல்டர்கள் மட்டுமே இருப்பர்.

ஜெயசூர்யா அல்லது கலுவிதர்னாவுக்கு பந்து வீசும் போது எனக்கு ஒரு வாய்ப்பு உள்ளதாக தெரியும். எல்லா பந்தையும் அவர்கள் அடிக்கும் போது அவர்களை என்னால் வீழ்த்த முடியும்.

ஆனால், சச்சின், சுப்மன் போன்ற வீரர்கள் சரியான கிரிக்கெட் ஷாட்களை ஆடுகிறார்கள். மூன்று வகையான கிரிக்கெட்டிலும் ரன் எடுக்க கூடிய வீரராக உள்ளார் என நினைக்கிறேன். அவர் உலக கிரிக்கெட்டின் எதிர்கால சூப்பர் ஸ்டார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்