டெல்லியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. அலுவலகத்தில் திருட்டு
இதே அலுவலகத்தில் கடந்த 2017-ம் ஆண்டிலும், அதற்கு முன்பு ஒருமுறையும் திருட்டு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி,
கிழக்கு டெல்லியின் விஸ்வாஸ் நகர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பாவர் ஓம் பிரகாஷ் சர்மா. பா.ஜ.க.வை சேர்ந்த இவரது எம்.எல்.ஏ. அலுவலகம் விஸ்வாஸ் நகரில் செயல்பட்டு வருகிறது.
சனிக்கிழமை இரவில், எம்.எல்.ஏ. அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த 2 டி.வி.களை பெயர்த்து எடுத்து சென்றுள்ளனர். மேலும் அலுவலகத்தையும் சூறையாடி உள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு திருடர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இதே அலுவலகத்தில் கடந்த 2017-ம் ஆண்டிலும், அதற்கு முன்பு ஒருமுறையும் திருட்டு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.