டு பிளசிஸ், மேக்ஸ்வெல் அதிரடி: பெங்களூரு 199 ரன்கள் குவிப்பு...!

டு பிளசிஸ், மேக்ஸ்வெல் அதிரடியால் பெங்களூரு 199 ரன்கள் குவித்துள்ளது.

Update: 2023-05-09 16:05 GMT

மும்பை,

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்றைய 54வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.

இதையடுத்து, பெங்களூரு தொடக்க வீரர்களாக கேப்டன் டு பிளசிஸ், விராட் கோலி களமிறங்கினர். 4 பந்தில் 1 ரன் எடுத்திருந்த விராட் கோலி முதல் ஓவரிலேயே அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த அனுஜ் ராவத் 6 ரன்னில் அவுட் ஆனார். இதனால், பெங்களூரு 2.2 ஓவரில் 16 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

இதையடுத்து, களமிறங்கிய மேக்ஸ்வெல் கேப்டன் டு பிளசிஸ் உடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 33 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சர்கள் உள்பட 68 ரன்கள் குவித்த மேக்ஸ்வேல் கேட்ச் மூலம் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய லுமூர் 1 ரன்னில் அவுட் ஆனார்.

ஆனால், மறுமுனையில் சிறப்பாக ஆடிய கேப்டன் டு பிளசிஸ் 41 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 65 ரன்கள் குவித்து அவுட் ஆனார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 18 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்சர் உள்பட 30 ரன் எடுத்து அவுட் ஆனார்.

இறுதியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. கேதார் ஜாதவ் 12 ரன்களுடனும், ஹசரங்கா 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மும்பை அணியின் ஜேசன் பெஹ்ரெட்ன்ரொப் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களமிறங்க உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்