ஆசிய விளையாட்டு போட்டிகள்; இந்திய கிரிக்கெட் அணியில் இந்த தமிழக வீரரை தேர்வு செய்திருக்க வேண்டும் - இந்திய முன்னாள் வீரர் கருத்து

ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-16 10:04 GMT

மும்பை ,

ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் கலந்து கொல்கின்றன.

உலககோப்பை தொடர் நடைபெறும் சமயத்தில் சீனாவில் ஆசிய விளையாட்டுகள் நடைபெற உள்ளது. உலகக்க்கோப்பை தொடருக்கு ரோகித், கோலி, கில் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் விளையாட உள்ளனர். சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்த அணியில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வா, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா, அவேஷ் கான், ரவி பிஷ்னோய் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த அணியில் தமிழகம் தரப்பில் வாஷிங்டன் சுந்தர் நேரடி அணியிலும், சாய் சுதர்சன், சாய் கிஷோர் ஸ்டான் பை வீரர்களாகவும் அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை அணியில் எடுக்காதது ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளதாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது ,

இந்த அணியை பார்க்கும் போது அவர்கள் சிறப்பாக உருவாக்கியுள்ளதாக உங்களுக்கு தெரிகிறது. சொல்லப்போனால் சில புதுமுக வீரர்களின் பெயர்களை இது போன்ற தொடர்களுக்கான அணியில் மட்டுமே பார்க்க முடியும்.

ஆனால் இந்த அணியிலும் ஏதோ ஒரு முக்கிய பெயர் தவறியுள்ளதாக நீங்கள் பார்க்கிறீர்களா? அந்த வகையில் இந்த அணியில் வருண் சக்கரவர்த்தி என்ற பெரிய பெயர் இல்லை என்று நான் கருதுகிறேன். ஏனெனில் நீங்கள் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அவரை விளையாடினார்கள். ஆனால் திடீரென்று அவரை நீங்கள் நீக்கி விட்டீர்கள்

இருப்பினும் ஐபிஎல் தொடரில் அவர் தொடர்ந்து ஒரு சிறந்த சுழற்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகிறார். அதன் காரணமாக இந்த தொடரில் அவரும் இடம் பெறுவார் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் அது நடக்கவில்லை.

அணியில் இடம் பிடித்துள்ள வாஷிங்டன் சுந்தர் தம்முடைய ஐபிஎல் அணியில் குறைவான ஓவர்கள் வீசி இன்னும் காயத்துடன் போராடிக் கொண்டிருக்கிறார். ஷபாஸ் அகமது இந்திய அணியில் அவ்வப்போது தேர்வு செய்யப்படுகிறார்.

அப்படி ஏற்கனவே தேர்வான வீரர்கள் மீண்டும் வாய்ப்பு பெறும் பட்சத்தில், வருண் சக்கரவர்த்தி இந்த அணியில் இருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்