ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி மும்பை வந்தடைந்தது - வீடியோ...!

நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

Update: 2023-09-18 05:11 GMT

Image Grab by Video Tweeted by @ANI 

மும்பை,

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இலங்கை 50 ரன்னில் சுருண்டது. பின்னர், இந்தியா விக்கெட் இழப்பின்றி சேசிங் செய்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

100 ஓவர்கள் கொண்ட இந்த போட்டி 21.3 ஓவர்களிலேயே முடிவடைந்தது. போட்டி முன்னதாகவே முடிந்த நிலையில், இந்திய வீரர்கள் உடனடியாக இந்தியா திரும்பினர். அவர்கள் இன்று காலை மும்பையில் உள்ள கலினா விமான நிலையம் வந்தடைந்தனர். அதன்பின், சொகுசு காரில் தங்களது வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்.

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா போன்றோர் தங்களது சொகுசு காரில் புறப்பட்டுச் சென்றனர். வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள், மும்பையில் இருந்து விமானங்கள் மூலம் தங்களது சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்