ஆசிய கோப்பை தொடர் இலங்கைக்கு மாற்றம்...? - வெளியான புதிய தகவல்...!

ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

Update: 2023-05-09 06:05 GMT

புது டெல்லி,

2023ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றிருந்தது. ஆனால் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்றால் இந்தியா அதில் கலந்து கொள்ளாது என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடரை நடத்துவதாகவும், இந்தியா பங்கேற்கும் ஆட்டங்களை மட்டும் பொதுவான இடத்தில் நடத்துவதாகாவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானுக்கு பதிலாக இலங்கையில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவுக்கான ஆட்டங்களை மட்டும் பொதுவான இடத்தில் நடத்தலாம் என்ற பாகிஸ்தானின் யோசனையை இலங்கை மற்றும் வங்கதேச நாடுகள் ஏற்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் காரணமாக ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மாற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்