ஆசிய கோப்பை: இந்தியாவுடன் நாளை நடைபெற உள்ள போட்டிக்கான ஆடும் லெவனை அறிவித்தது பாகிஸ்தான்

ரசிகர்களும் எதிர் பார்க்கும் இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை நடைபெற உள்ளது

Update: 2023-09-01 15:25 GMT

Image Tweet : Pakistan Cricket

கொழும்பு,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது.

இதன்படி இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் புதன்கிழமை தொடங்கியது. அதில் நேபாள அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றியோடு தொடரை தொடங்கியது. இந்தப் போட்டியில், பாகிஸ்தானின் ஷதாப் கான் 4 விக்கெட் கைப்பற்றினார். ஷாஹீன் அப்ரிடி, ஹரிஷ் ரவுப் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், நசீம் ஷா மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

இந்த நிலையில் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் எதிர் பார்க்கும் இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான ஆடும் லெவன் வீரர்களை பாகிஸ்தான் அணி அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் அணி:

பகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம்(கேப்டன் ) , முகமது ரிஸ்வான், சல்மான் ஆகா, இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப்

Tags:    

மேலும் செய்திகள்