2வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஆடும் லெவன் அணியை அறிவித்த தென் ஆப்பிரிக்கா..!

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டிஸ் அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.

Update: 2023-03-07 15:36 GMT

Image Courtesy: @ProteasMenCSA

ஜோகன்ஸ்பர்க்,

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டிஸ் அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இவ்விரு அணிகளிடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் நாளை ஜோகன்ஸ்பர்க்கில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவன் அணியை தென் ஆப்பிரிக்கா அறிவித்துள்ளது. முதல் டெஸ்டில் ஆடிய வீரர்களில் இருந்து 4 பேரை மாற்றி உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய மார்கோ ஜான்சன், செனுரான் முத்துசாமி, கீகன் பீட்டர்சன் மற்றும் அன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ரியான் ரிக்கல்டன், வியான் முல்டர், கேசவ் மகாராஜ் மற்றும் சைமன் ஹார்மர் ஆகியோர் அணிக்குள் வந்துள்ளனர்.

2வது டெஸ்ட் போட்டிக்கான தென் ஆப்பிரிக்கா ஆடும் லெவன் அணி விவரம்:-

டீன் எல்கர், எய்டன் மார்க்ரம், டோனி டி சோர்ஜி, தெம்பா பவுமா (கேப்டன்), ரியான் ரிக்கல்டன், ஹென்றிச் க்ளாசென் (விக்கெட் கீப்பர்), வியான் முல்டர், கேசவ் மகாராஜ், சைமன் ஹார்மர், ககிசோ ரபடா, ஜெரால்ட் கோட்ஸி.


Tags:    

மேலும் செய்திகள்