2வது டி20 போட்டி: இலங்கையை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி...!

நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் போட்டி டுனிடினில் இன்று நடந்தது.

Update: 2023-04-05 09:03 GMT

Image Courtesy: @ICC 

டுனெடின்,

நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் போட்டி டுனெடினில் இன்று நடந்தது. முதலில் விளையாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் 141 ரன்னில் ஆல்அவுட் ஆனது. தனஞ்செய டி சில்வா அதிக பட்சமாக 20 பந்தில் 37 ரன் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் ஆடம் மிலின் 5 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 14.4 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 146 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிம் செய்பெர்ட் 43 பந்தில் 79 ரன் (3 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார்.

முதல் போட்டியில் இலங்கை சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் வருகிற 8-ந்தேதி நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்