இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்து கேப்டனாக சான்ட்னெர் நியமனம்
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஆடும் நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
வெலிங்டன்,
இலங்கை தொடர் முடிந்ததும் அடுத்து நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வருகை வந்து 3 ஒரு நாள் (ஜன. 18, ஜன.21, ஜன.24) மற்றும் மூன்று 20 போட்டிகளில் ( ஜன.27, ஜன.29, பிப்.1) விளையாடுகிறது.
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஆடும் நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் கேன் வில்லியம்சன், வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னெர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து 20 ஓவர் போட்டி அணி வருமாறு:-
மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), பின் ஆலென், பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டேன் கிளிவர், கான்வே, ஜேக்கப் டப்பி, லோக்கி பெர்குசன், பென் லிஸ்டர், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் ரிப்போன், ஹென்றி ஷிப்லி, சோதி, பிளேர் டிக்னெர்.