வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு புதிய கேப்டன்கள் நியமனம்..!
டி20 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் முதல் சுற்றுடன் வெளியேறியது. இதையடுத்து கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக நிக்கோலஸ் பூரன் அறிவித்தார்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் புதிய கேப்டன்களாக ஷாய் ஹோப் மற்றும் ரோவ்மேன் பவல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் முதல் சுற்றுடன் வெளியேறியது. இதையடுத்து கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக நிக்கோலஸ் பூரன் அறிவித்தார். மேலும் ஒரு பேட்டராகவும் அவர் பங்களிப்பு அந்த தொடரில் மோசமாகவே இருந்தது.
அதற்குப் பிறகு வரும் மார்ச் மாதத்தில் தான் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அந்த அணி விளையாடவுள்ளது.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் போட்டி அணிக்கு ஷாய் ஹோப், டி20 அணிக்கு ரோவ்மேன் பவலும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.வெஸ்ட் இண்டீஸ் ,தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது.