புது விதமான வால் பேப்பர்கள்
அறையின் அலங்காரத்திற்காக சிறந்த வடிவமைப்புகளையும், வால்பேப்பர்களையும் தேர்வு செய்யும் பொழுது வால் பேப்பர் வகைகளை நாம் புரிந்து கொள்வது அவசியம்.
*வினைல் வால்பேப்பர்:அதன் பல் துறை திறன் காரணமாக மிகவும் பிரபலமான வால்பேப்பர்களில் ஒன்றாக இது உள்ளது..இதை நிறுவுவது, அகற்றுவது மற்றும் சுத்தம் செய்வது என அனைத்துமே எளிதாகும்..
*சாலிட் ஷீட் வினைல்: இது ஒரு பியூர் வினைல் வால்பேப்பர் ஆகும்.. இது தடிமனாக இருப்பதால் அதிக நாள் நீடித்து உழைக்கக் கூடியதாக இருக்கின்றது.. இதில் அச்சிடப்பட்டிருக்கும் டிசைன்கள் உங்கள் அறைக்கு அழகைக் கூட்டும் விதமாக இருக்கும்.
*வினைல் கோட்டட் ஃபேப்ரிக்: இது வினைல் பூசப்பட்ட துணியினால் செய்யப்பட்ட வால்பேப்பர் ஆகும்.. இயற்கையான உணர்வையும், அமைப்பையும் தருவதாலேயே இது மிகவும் பிரபலமாக இருக்கின்றது..இதில் பூசப்பட்டிருக்கும் வினைல் அதிக பாதுகாப்பு மற்றும் ஆயுளை வழங்குகிறது..வரவேற்பறை மற்றும் டைனிங் ஹாலிற்கு மிகவும் சிறந்த தேர்வாக இது இருக்கும்..
* வினைல் கோட்டட் பேப்பர்: இது நீடித்து நிலைத்திருக்கும் தன்மை மற்றும் துவைக்கும் தன்மையை வழங்குகிறது..குளியலறை, சலவை அறை மற்றும் சமையலறை போன்ற அதிக ஈரப்பதம் உள்ள அறைகளுக்கு ஒரு சிறந்த வால்பேப்பர் இவை என்று சொல்லலாம்...
* நான்- ஓவன் வால்பேப்பர்: சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இவற்றை அமைப்பதும், அகற்றுவதும் அதேபோல் துவைப்பதும் எளிதானது.அவ்வளவு எளிதில் கிழியாது..
*ஈஸி -வால்ஸ் வால்பேப்பர்: இவற்றில் பிவிசி மற்றும் விவோசி இல்லை என்பதுடன் இதில் பயன்படுத்தப்படும் மையானது தண்ணீர் சார்ந்தது ..இந்த வால் பேப்பர்கள் பசையுடன் வருவதால் இவற்றை நிறுவுவதும், அகற்றுவதும் மிகவும் எளிதாகிறது.
* ப்ரி பேஸ்டட் வால்பேப்பர்: இந்த வால்பேப்பரிலேயே பசை இருப்பதால் இதை ஒட்டுவதற்கு என்று தனியாக பிசின் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
*கிராஸ் க்ளாத் வால்பேப்பர்: இது இயற்கையான கூறுகளிலிருந்து தயாரிக்கப்படும் மிகவும் கடினமான ஓவன் வால்பேப்பர் ஆகும்.இதில் படியும் கறை மற்றும் அழுக்குகளை உடனுக்குடன் சுத்தம் செய்வது அவசியம்.