சென்னை பெருநகரின் நில வகைகள்

சென்னை பெருநகர் பகுதிகளை, மொத்த நிலப்பகுதி, ஆதாரக் குடியிருப்புகள், வணிகப் பகுதிகள், தொழில் பகுதிகள், நீர் நிலைகள், நீர்ப்பிடிப்பு பகுதிகள் என பல நிலைகளில் பிரித்து வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Update: 2019-07-20 10:46 GMT
அதன் அடிப்படையில் வீடுகள், அடுக்குமாடிகள், தொழில் மற்றும் வர்த்தகம் ஆகிய பயன்பாடுகளுக்கான புதிய கட்டுமான திட்ட அனுமதி அளிக்கப்படுகிறது. சென்னையின் நில அமைப்புகள் மற்றும் அவற்றின் வகைகள் ஆகியவை தொகுக்கப்பட்டு, தேசிய தகவல் மையத்தின் உதவியுடன் நிலங்களின் தன்மைகள் குறிப்பிடப்பட்டு, சி.எம்.டி.ஏ இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அந்த வரைபடங்களை இணையதளம் மூலம் பார்வையிடலாம். தேவைப்படுபவர்கள் அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் மூலம் தங்கள் பகுதி நிலம் அல்லது வாங்க விரும்பும் நிலம் ஆகியவை எந்த அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு உள்ளது என்ற விவரத்தை அறிந்து செயல்படலாம். புதிதாக வீடு அல்லது மனை வாங்க முடிவு செய்திருப்பவர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கான நில வகை மற்றும் அங்கு உள்ள நீர் நிலைகள் ஆகியவை பற்றி அறிந்து அதற்கேற்ப வாங்குவது பற்றியும் முடிவெடுக்க இயலும்.

மேலும் செய்திகள்