வீட்டின் மறுசீரமைப்பு கடனுக்கு வரிச்சலுகை இல்லை
சில வருடங்களுக்கு முன்னர் வங்கியில் கடன் பெற்று கட்டிய வீட்டுக்கான மறுசீரமைப்பு உள்ளிட்ட இதர பராமரிப்பு பணிகளுக்காக கூடுதலாக கடன் பெற்றால், அதற்கு செலுத்தப்படும் வட்டிக்கு வரிச்சலுகை கிடைக்குமா என்று பலருக்கும் சந்தேகம் உள்ளது.
குறிப்பிட்ட வீட்டுக்கு முதலில் பெற்ற வீட்டு கடன் வரிச்சலுகையில், அதன் மேல் பெறப்படும் அனைத்து கடன் வட்டிக்கான சலுகைகளும் உள்ளடங்கியது என்ற நிலையில், இதர காரணங்களுக்காக அந்த வீட்டின் மீது பெறப்படும் கடன்களுக்கு தனிப்பட்ட வரிச்சலுகை அளிக்கப்படுவதில்லை என்று ரியல் எஸ்டேட் நிதி ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.