வளர்ச்சி பாதையில் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை
சென்னை ரியல் எஸ்டேட் சந்தையின் நிலவரம் கடந்த ஆண்டுகளை விடவும், ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலகட்டத்தில் சுமார் 8 சதவிகித அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளதாக ரியல் எஸ்டேட் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
இந்த காலகட்டத்தில் 6500 வீடுகளுக்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, அடுக்குமாடி வீடுகள் மற்றும் தனி வீடுகளின் விலை கிட்டத்தட்ட 4 சதவிகித அளவுக்கு கட்டுனர்கள் குறைத்துள்ளதுடன், ரூ.50 லட்சத்துக்குள் வீடுகள் கொண்ட பல்வேறு குடியிருப்பு திட்டங்களையும் இந்த காலகட்டத்தில் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
விற்பனை அதிகரிப்பு
கடந்த 2017-ம் ஆண்டு பிற்பகுதியில் கிட்டத்தட்ட 6500 வீடுகள் விற்பனை ஆன நிலையில், நடப்பு வருடத்தின் முதல் ஆறு மாதங்களுக்குள் சுமார் 8500 வீடுகள் என விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக, வங்கிகள் மற்றும் நிதி வசதி நிறுவனங்கள் ஆகியவற்றில் அளிக்கப்படும் வீட்டுக்கடன் மற்றும் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் ஆகியவை வீடு வாங்கும் ஆர்வத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தி உள்ளதாகவும் வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
புற நகர் பகுதிகள்
மேலும், ரூ.25 முதல் 40 லட்சம் விலையில், கட்டுமான பணிகள் முடிவடையும் நிலையில் உள்ள குடியிருப்புகள் பலரையும் ஈர்த்துள்ளதோடு, புற நகர் பகுதிகளான கேளம்பாக்கம், சிறுசேரி, மதுரவாயல் மற்றும் கொளப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் பலரும் முதலீட்டு அடிப்படையில் வீடுகள் வாங்கியுள்ளதாகவும் வல்லுனர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். கடந்த 3 வருடங்களை ஒப்பிடும்போது, சென்னை தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகள் விற்பனை கிட்டத்தட்ட 3 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளதும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.