நெகிழும் தன்மை கொண்ட கான்கிரீட்
பொதுவாக, கான்கிரீட் என்பது உறுதியான தன்மையுடன் நீடித்து நிற்கக்கூடியது.
பொதுவாக, கான்கிரீட் என்பது உறுதியான தன்மையுடன் நீடித்து நிற்கக்கூடியது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் கண்டறியப்பட்ட புதுமையான நெகிழும் தன்மை கொண்ட ஈ.சி.சி (என்ஜினியர்டு சிமெண்டிஸியஸ் காம்போசைட்) என்றும், தொழில்நுட்ப ரீதியாக ‘பென்டபிள் கான்கிரீட்’ என்றும் அந்த முறை குறிப்பிடப்படுகிறது.
பாலிமர் மூலக்கூறுகள்
தற்போது பயன்பாட்டில் உள்ள ‘பைபர் ரீ-இன்போர்ஸ்டு கான்கிரீட்’ என்ற தொழில் நுட்பத்திலிருந்து இந்த முறையானது, சற்றே வேறுபட்ட ‘மைக்ரோ-மெக்கானிக்ஸ்’ என்ற முறையில் தயார் செய்யப்படுகிறது. நுண் அணுக்களின் அளவு கொண்ட ‘பாலிமர்’ வகை மூலக்கூறுகள் இவற்றில் அடங்கியுள்ள காரணத்தால், இந்த கான்கிரீட் அமைப்புகள் நெகிழும் தன்மை மற்றும் வளையும் தன்மை கொண்டதாக உள்ளன.
எடை குறைவு
மேற்கண்ட, தொழில் நுட்பத்தில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், கட்டுமானங்களுக்கு பயன்படும் மற்ற வகை ‘பிளாக்குகளை’ விடவும் குறைந்த எடை உள்ளதாகும். மேலும், கான்கிரீட்டுடன் பைபர் மற்றும் பாலிமர் (பாலி வினைல் ஆல்ஹகால்) வகை மூலக்கூறுகள் கொண்டு தயாரிக்கப்படுவதால் நெகிழ் தன்மை கொண்டு விளங்குகின்றன.
பாதுகாப்பான தொழில்நுட்பம்
‘லைட் வெயிட் ஈ.சி.சி கான்கிரீட்’, ‘செல்ப் கம்பாக்டிங் கான்கிரீட்’, மற்றும் ’எக்ஸ்ட்ருடபிள் ஈ.சி.சி’ ஆகிய முறைகளில் மேற்கண்ட நெகிழும் கான்கிரீட் உபயோகப்படுத்தப்படுகிறது. பல அடுக்குகள் கொண்ட மாடி கட்டிட அமைப்புகளில் இவ்வகை கான்கிரீட் பயன்படுத்துவது தொழில்நுட்ப ரீதியாக பாதுகாப்பானது என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும், விரிசல்கள் ஏற்படுள்ள கட்டிட பகுதிகளில் இந்த வகை கான்கிரீட் ‘ஸ்பிரே’ செய்யப்படும் பட்சத்தில் அவை சுலபமாக சரி செய்யப்படுகின்றன.