வீட்டு மனையின் உட்பிரிவு சர்வே எண்
எப்போதும் வீட்டுமனை வாங்கும் சமயங்களில் சர்வே எண் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.
எப்போதும் வீட்டுமனை வாங்கும் சமயங்களில் சர்வே எண் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஒரே மாதிரியான லே–அவுட் கொண்ட மனைப்பிரிவில் மனை வாங்கும்பொழுது, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சர்வே எண்கள் கொடுத்து மனைகள் பிரிக்கப்பட்டிருக்கும். அதாவது, ஒரு மனை மட்டும் வாங்கப்படும்போது அதற்கான உட்பிரிவு சர்வே எண்ணானது, ஒட்டுமொத்த மனைக்கான முழுமையான சர்வே எண்ணில் இருந்து, பகுதியாக பிரிக்கப்பட்டு ஏ, பி, சி என்று அளவீடு செய்யப்பட்டு அதற்கான இலக்கங்களை கொண்டதாக இருக்கும்.
ஒரே மனைப்பிரிவு
குறிப்பிட்ட ஒரு மனைப்பிரிவு மொத்தமாக புரமோட்டரால் வாங்கப்பட்டிருக்கும் பட்சத்தில் பிரச்சினை இல்லை. அதற்கு ஒரே சர்வே எண் இருப்பதால், அந்த எண்ணை உறுதி செய்து கொள்வதே போதுமானது. ஆனால், ஒரு மனைப்பிரிவானது வெவ்வேறு நபர்களிடமிருந்து வாங்கப்பட்டிருக்கும் பட்சத்தில் சர்வே எண்கள் கவனிக்கப்பட வேண்டும்.
பல்வேறு சர்வே எண்கள்
அதாவது, லே–அவுட்டில் இருக்கும் மனைப்பிரிவுக்கு உரிமையாளர் ஒருவர்தானா.? என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட உரிமையாளர்களிடம் இருந்து நிலம் வாங்கப்பட்டு மனைப்பிரிவு உருவாக்கப்பட்டிருக்கும் வாய்ப்பு உள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் இருக்கும்போது, மனைப்பிரிவுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட சர்வே எண்கள் அடங்கி இருக்கும். ஒவ்வொரு சர்வே எண்ணுக்கும் தனித்தனியாக வரைபடம் இருக்கும். அதுபோல சில மனைகள் வேவ்வேறு சர்வே எண்களில் அமைந்திருக்கலாம். அதாவது, 1 முதல் 10 மனைகள் வரிசையாக இடம் பெற்றிருக்கும் மனைப்பிரிவுகளில் சில மனைகளுக்கு இரண்டு சர்வே எண்கள் கூட அமைந்திருக்கும் வாய்ப்புள்ளது.
மற்ற விஷயங்கள்
அதனால் மனைக்கான உட்பிரிவு சர்வே எண்ணை உறுதி செய்துகொண்டு, பத்திரப்பதிவின்போது அதனை தெளிவாக குறிப்பிடவேண்டும். அந்த இலக்கத்தில் சிறிய மாற்றம் கூட இருக்கக்கூடாது. சர்வே எண்ணின் உட்பிரிவு, மனைக்குரிய பட்டா எண், மனையின் உரிமையாளரின் பெயர், நிலத்தின் தன்மை, நிலத்தின் பரப்பளவு ஆகிய விஷயங்களிலும் கவனம் செலுத்துவது முக்கியம்.