கண் கவரும் மரச்சாமான்களை பாதுகாக்கும் வழிமுறைகள்
எப்போதும் மவுசு குறையாத பொருட்களில் மரச்சாமான்களுக்கு எப்போதும் நிலையான இடம் உண்டு.
எப்போதும் மவுசு குறையாத பொருட்களில் மரச்சாமான்களுக்கு எப்போதும் நிலையான இடம் உண்டு. பொதுவாக, வீடுகளில் உபயோகத்தில் உள்ள மரச்சாமான்கள் சற்று கூடுதல் விலை கொண்டதாக இருப்பதோடு, அதற்கேற்ப சரியான பராமரிப்புகளும் தேவையானதாக இருக்கும். இல்லையெனில், கரையான் மற்றும் பூஞ்சை போன்ற பாதிப்புகளால் அவற்றின் நீடித்த பயன்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படும். வீட்டு மரச்சாமான்களின் பாதுகாப்பில் எவ்விதமான நடவடிக்கைகளை கடைப்பிடித்து பாதுகாப்பது என்ற அவசியமான குறிப்புகளை இங்கே காணலாம்.
•பொதுவாக கரையான்கள் செங்கலில்கூட துளையிட்டு உள்ளே நுழையும் தன்மை பெற்றவை. மரச்சாமான்களை அரிப்பதில் அவற்றின் பங்கு அதிகமாக இருக்கும். ஒரு முறை வந்துவிட்டால், தொடர்ச்சியாக அனைத்து மரச்சாமான்களையும் அரித்து விடும். அதனால், புதிய மரச்சாமான் வாங்கியதும் முன்னெச்சரிக்கையாக அவற்றின் மேற் ‘டெர்மைட் கன்ட்ரோல்’ பூச்சிக்கொல்லியை பூசிவிடுவதன் மூலம், கரையான் மற்றும் பூஞ்சை பாதிப்புகள் தடுக்கப்படும்.
*வாரம் ஒரு முறை உலர்ந்த துணியால் மரச்சாமான்களை சுத்தம் செய்து, ஒரு முறை வெள்ளை வினிகரில் நனைத்த ஈரமான துணி கொண்டு துடைக்கலாம். பிறகு, இரண்டு மணி நேரம் வெயிலில் உலர வைத்து, மீண்டும் சுத்தமான துணியில் துடைத்து விட்டால், கரையான் பாதிப்பு முற்றும் தடுக்கப்படும்.
* வேப்பிலை பொடியை, கரையான்கள் உள்ள மரச்சாமான்களில் தூவி விட்டால், கரையான்கள் தொல்லை இருக்காது. வேப்பிலையை நன்றாக அரைத்து, தண்ணீரில் கலந்து, துணியில் நனைத்து 15 நாட்களுக்கு ஒருமுறை துடைத்து வந்தால் மரச்சாமான்கள் அரிமானம் இன்றி பாதுகாப்பாக இருக்கும்.
* மழை மற்றும் குளிர் காலங்களில் மரச்சாமான்களில் ஈரப்பதம் காரணமாக பூஞ்சைகள் தோன்றும். இதனால், வெள்ளை நிற பட்டைகள் தோன்றி மரச்சாமான்களின் அழகும், தரமும் கெட்டுவிடும். அதனால், நீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து, பஞ்சில் நனைத்து, மரச்சாமான்களின் மேல் ஒரு கோட்டிங் தேய்த்து பூஞ்சை பாதிப்பை தடுக்கலாம்.
* மரத்தாலான மேஜை மற்றும் நாற்காலிகள் ஈரமாக இருந்தால், வெயிலில் சில மணி நேரம் உலர வைத்தால், பூஞ்சைகள் மறைந்து விடும். மேலும், மரச்சாமான்களின் மீது தண்ணீர் பட்டவுடன் உடனடியாக துடைத்து விடுவது அவசியம்.
* மர எண்ணெய் மற்றும் தேன் மெழுகு இரண்டும் சம அளவில் கலந்து, மர பர்னிச்சர்களை சுத்தம் செய்தால் பளபளப்பாக ஆவதுடன், கரையான்கள் பர்னிச்சரில் தங்காது.
* ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மெலமைன் பாலீஸ் செய்து மரச்சாமான்களை புது பொலிவுடன் பாதுகாக்கலாம்.
* மரச்சாமான்களை வேறு இடத்திற்கு நகர்த்தும்போது கச்சிதமாக தூக்கி வைப்பது முக்கியம். அப்படியே நகர்த்தினால் தரைப்பரப்பில் கீறல் உண்டாவதோடு, மரத்தின் கீழ்ப்பகுதி பாதிக்கப்படும்.
* வேம்பு மற்றும் தேக்கு மரங்களில் இயல்பாக கரையான்களுக்கு ஆகாது என்பதால், மரச்சாமான்களை அத்தகைய மரங்களில் செய்வது
நல்லது.