அடுக்குமாடி வீடுகளுக்கான வாஸ்து குறிப்புகள்
நகர்ப்புறங்களில் இருக்கும் வாழ்க்கை தரம் காரணமாக சொந்தமாக தனி வீடு என்பது ‘காஸ்ட்லியாக’ மாறியிருக்கிறது.
நகர்ப்புறங்களில் இருக்கும் வாழ்க்கை தரம் காரணமாக சொந்தமாக தனி வீடு என்பது ‘காஸ்ட்லியாக’ மாறியிருக்கிறது. அதற்கு மற்றாக அமைந்த அடுக்கு மாடி குடியிருப்புகள் தனி வீடு லட்சியத்தை பலருக்கும் சாத்தியமானதாக ஆக்கியிருக்கிறது. பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்களின் கனவுகளை ‘ப்ளாட்’ வீடுகள் நனவாக மாற்றி இருக்கின்றன.
எப்படியோ பல சிரமங்களுக்கு இடையில் அடித்து பிடித்து, கையில் உள்ள தொகையை முன்பணமாக போட்டு, மீதித்தொகைக்கு ‘லோன்’ போட்டு, அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு ‘பிளாட்’ வாங்கியிருப்பது பலருக்கும் அனுபவமாக இருக்கும். அவ்வாறு வாங்கக்கூடிய ‘பிளாட்டில்’ ஒரு சில வாஸ்து குறைகள் இருப்பதாக பலரும் நினைப்பதுண்டு. வீட்டின் நுழை வாசலுக்கு எதிராக வேறொரு வீட்டின் நுழைவாசல் இருப்பது, ‘லிப்ட்’ அல்லது மாடிப்படிக்கட்டுகள் அமைந்திருப்பது போன்றவை பல இடங்களில் அமைந்திருக்கும்.
பொதுவாக, அடுக்குமாடி குடியிருப்புகளில் தலைவாசல்கள், வெவ்வேறு திசையை நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். நான்கு திசைகள் மற்றும் மற்ற கோண திசைகள் ஆகியவற்றிலும் தலைவாசல்கள் அமைந்து விடுவதும் உண்டு. மேற்கண்ட சிக்கல்களில் தலைவாயிலுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள குறைகளை சரி செய்வதற்கு வாஸ்து வல்லுனர்கள் தரக்கூடிய ‘டிப்ஸ்’ பற்றி இங்கே காணலாம்.
* அடுக்குமாடி வீடுகளின் தலைவாசலுக்கு எதிராக உள்ள ‘லிப்ட்’ அமைப்பானது முன்னேற்றத்தை தடுப்பதாகவும், லிப்டின் கதவுகள் அடிக்கடி திறந்து மூடுவதன் காரணமாக, எதிர்மறை சக்திகள் உருவாகி எதிரில் உள்ள வீட்டை பாதிப்பதாகவும் கருதப்படுகிறது.
* அந்த பாதிப்பை சரி செய்வதற்காக, தலைவாசல் கதவின் மேல்பகுதியில் குவிந்த கண்ணாடி ஒன்றை பொருத்த வேண்டும். மேலும், கதவு நிலைக்கு வெளிப்புறமாக இரண்டு அங்குல அளவில் வாயில்படி போன்ற அமைப்பை அமைக்கலாம். அதன் காரணமாக, வீட்டுக்குள் நுழைபவர்கள் படியின்மீது ஏறி உள்ளே செல்வது போல இருக்கும்.
* வெவ்வேறு ‘பிளாட்களில்’ கதவுகள் ஒன்றை ஒன்று எதிரெதிரே அமைத்திருக்கும் பட்சத்தில், இரண்டு கதவுகளும் ஒரே அளவில் இருந்தால் பெரிய பாதிப்புகள் இருக்காது என்று அறியப்பட்டுள்ளது.
* வீட்டுக்குள் அமைக்கப்பட்ட அறைகளின் கதவுகள் நேர் எதிராக இல்லாமல், சற்று விலகி இருக்கும் பட்சத்தில், கதவுகளுக்கு எதிரே உள்ள சுவரில் ஒரு நிலைக்கண்ணாடியை பொருத்துவது அவசியம்.
* வீடுகளுக்குள், எதிரெதிராக உள்ள இரண்டு அறைகள் ஒரே அளவு கொண்டதாக இருந்தால், அந்த அறைகளின் கதவுகளும் ஒரே அளவாக இருப்பது முக்கியம். கதவுகள் வேவ்வேறு அளவுகளில் இருப்பது கூடாது.
* எதிரெதிராக அமைந்த அறைகளில், ஒரு அறை பெரியதாகவும், மற்ற அறை சிறியதாகவும் இருந்தால், சிறிய அறைக்கு சிறிய கதவுகளும், பெரிய அறைக்கு பெரிய கதவுகளும் அமைக்கப்பட வேண்டும்.
* பொதுவாக நீளமான ‘வராண்டா’ அமைப்பின் கடைசியில் அமைக்கப்படும் அறையானது சிறப்பாக இருக்காது என்று சொல்லப்படுகிறது. அதனால், அந்த அறையின் முன் பக்க கதவின்மீது கண்ணாடியை பொருத்துவது முக்கியம்.