கட்டுமான பணியில் பொருட்கள் பாதுகாப்பு
கட்டுமான நிறுவனங்கள், சொந்த வீடு கட்டுபவர்கள் மற்றும் கான்ட்ராக்டர்கள் ஆகிய அனைத்து தரப்பினரும் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் கட்டுமான பொருட்கள் சேமிப்பு என்பதாகும்.
கட்டுமான பணிகளின் தேவைக்கும், அளவுக்கும் தக்கவாறு மூலப்பொருட்களை கொள்முதல் செய்வது எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்கு பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதும் அவசியமானது. கட்டுமான பொருட்களின் பாதுகாப்பு குறித்து அனுபவம் மிக்க கட்டுமான வல்லுனர்கள் பல்வேறு ஆலோசனைகளை தந்திருக்கிறார்கள். அவற்றை பற்றிய தொகுப்பை காணலாம்.
• கட்டுமான பணிகள் நடக்கும்போது, தவறான முறையில் பொருட்களை கையாள்வதன் காரணமாக 5 முதல் 7 சதவிகித அளவுக்கு பொருட்கள் வீணாவதாக கண்டறியப்பட்டுள்ளது. திறமையான கட்டுமான பணியாளர்கள் எல்லா சமயத்திலும் கிடைக்க மாட்டார்கள் என்ற நிலையில், பணிகளின்போது பொருட்களின் பயன்பாடு பற்றி அவர்களிடம் தக்க ஆலோசனைகளை தெரிவிக்கவேண்டும்.
• கட்டுமான பணிகளுக்கு தேவையான பொருட்களை மொத்தமாகவோ அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தேவையான அளவுக்கோ துல்லியமாக கணக்கிட்டு, முன்கூட்டியே வாங்கி பாதுகாப்பாக சேமிப்பில் வைக்கவேண்டும்.
• மூலப்பொருட்களின் இருப்பு என்பது தேவைகளுக்கும், பற்றாக்குறைக்கும் இடையிலான வித்தியாசத்தை குறைப்பதாக இருக்க வேண்டும். அதனால், பணிகளின் தன்மைக்கு ஏற்ப இருப்பு பற்றிய முடிவுகளை சரியாக மேற்கொள்ளவேண்டும். இந்த விஷயத்தில் அனுபவம் பெற்றவர்களது ஆலோசனைகளை தயக்கமின்றி பெறுவது முக்கியம்.
• தேவைகளுக்கேற்ப 'மெட்டீரியல் சப்ளை' செய்யும் டீலர்களை கச்சிதமாக அறிந்து கொண்டு, சந்தையில் அதிகம் கிடைக்காத பொருட்கள் இருந்தால், அவற்றை முன்கூட்டியே தேவையான அளவு இருப்பில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும்.
• மூலப்பொருட்களை வாங்குவதற்கு முன்னர் அதன் விலை பற்றி பலமுறை கணக்கிட்டு, சரியான முடிவெடுத்து செயல்பட்டால், கட்டுமான பணிகளை சுலபமாக செய்து முடிக்கலாம். மேலும், தக்க பாதுகாப்புடனும், வெப்பம் மற்றும் மழை ஆகியவற்றால் பொருட்கள் பாதிக்கப்படாமல் 'தார்ப்பாலின்' உள்ளிட்ட 'பிளாஸ்டிக் ஷீட்கள்' கொண்டு மூடி வைப்பது நல்லது.
• ஈரம், காற்று ஆகியவற்றால் பாதிப்பு உண்டாகாதவாறு சிமெண்டு மூட்டைகள் பாதுகாக்கப்படவேண்டும். அவற்றை திறந்த வெளியிலும் அடுக்கி வைத்துவிடக்கூடாது.
• குறிப்பிட்ட ஒரு பொருள் பணிக்கு தேவை என்ற பட்சத்தில் மட்டும் அதை வாங்குவது அனைவராலும் ஏற்று கொள்ளப்பட்ட முறையாகும். தற்காலிக நிலவரங்கள் காரணமாக ஒரு குறிப்பிட்ட பொருளை அதிகமான அளவுக்கு ஸ்டாக் வைப்பது மறைமுகமான பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்துவதாக இருக்கலாம்.
• பொதுவாக, பொருட்களை நேரடியாக பணம் கொடுத்து வாங்குவதற்கும், அதே பொருளை கடன் அடிப்படையில் வாங்குவதற்கும் விலை வித்தியாசம் இருக்கும் வாய்ப்புகள் உண்டு என்ற அடிப்படையில், இயன்ற வரையில் நேரடியாக பணம் கொடுத்து வாங்குவது பற்றி மனதில் கொள்ளுங்கள்.
• கட்டுமான பொருட்களை பொறுத்தவரையில், பல்வேறு தரங்களில் பொருட்கள் கிடைப்பதால், எப்போதும் தரமானவற்றை பயன்படுத்துவதுதான் நல்லது. அவ்வாறு செய்வதன் மூலம் ஒரே செலவுதான் ஏற்படும். அதன் பின்னர் வரக்கூடிய பல்வேறு பராமரிப்பு செலவுகள் தவிர்க்கப்படுகிறது என்றும் அறியப்பட்டுள்ளது.
• சூரிய வெளிச்சம் நேரடியாக படுமாறு கட்டுமானங்களுக்கான ரசாயன பொருட்கள் அல்லது திரவங்கள் ஆகியவற்றை வைக்கக்கூடாது. மேலும், தீப்பற்றும் வாய்ப்புகள் உள்ள பொருட்களுக்கு அருகே 'வெல்டிங்' செய்வதில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்.
• கட்டுமான நிறுவனங்கள் மட்டுமல்லாமல் வீடு கட்டும் தனி நபர்களும்கூட ஒவ்வொரு நாளும் பணி முடிவில் பொருட்களின் ஸ்டாக் என்ன..? என்பதை கவனித்துக் கொள்ளவேண்டும். அடுத்த நாளுக்கு தேவையான பொருட்கள் தகுந்த அளவில் உள்ளதா?.. என்பதை அறிந்து கொண்டு செயல்பட்டால் பணிகளில் தாமதம் உண்டாகாது.