கட்டுமான துறையில் ரோபோக்கள் பயன்பாடு

கட்டுமான துறையில் ‘ரோபோக்கள்’ எனப்படும் தானியங்கி இயந்திர மனிதர்களது பங்களிப்பு கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகிறது.

Update: 2017-05-05 20:00 GMT
ட்டுமான துறையில் ‘ரோபோக்கள்’ எனப்படும் தானியங்கி இயந்திர மனிதர்களது பங்களிப்பு கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகிறது. பெரிய கட்டுமானங்களில் தொடர்ச்சியாக பல நாட்கள் செய்யவேண்டிய அஸ்திவாரம் தோண்டும் பணிகளை செய்வதில்தான் முதலில் அவை ஈடுபடுத்தப்பட்டன. பிறகு படிப்படியாக மற்ற வேலைகளிலும் அவற்றின் பங்களிப்பு அவசியமானதாக மாறிக்கொண்டு வருகிறது.

சரியான அளவிலும், இரவுபகலாக நாட்கணக்கில் தொடர்ச்சியாகவும், விடுமுறைகள் தேவைப்படாத தொழிலாளியாகவும் தானியங்கி ‘ரோபோக்கள்’ செயல்படுவதால் வேலைகள் குறித்த காலத்தில் முடிக்கப்படுவது இதன் சிறப்பாகும். முக்கியமாக கட்டுமான இடங்களில் ஏற்படும் விபத்துக்களால் ஏற்படும் மனித பாதிப்புகள் இதில் இருக்காது.

பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் பெரிய கட்டுமான வேலைகளை பூர்த்தி செய்ய ஐந்து அல்லது ஆறு வருடங்கள் பிடித்தது. மனித உழைப்பினால் மட்டுமே எல்லா வேலைகளையும் செய்து வந்த காரணத்தால் செலவுகளும் அதிகமாக ஏற்பட்டு கொண்டிருந்தது. இப்போதெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்குள் மிக நேர்த்தியாக 25 அடுக்குகள் கொண்ட மாடிக்கட்டிடம்கூட கட்டி முடித்து விடுகிறார்கள். இயந்திரங்களின் வரவுகள் மனித உழைப்பின் பங்களிப்பை பெருமளவுக்கு குறைத்து விட்டன.

பழைய கட்டுமான அமைப்புகளை இடிப்பது, மண் உறுதி இல்லாத இடங்களில் ஆழமான அஸ்திவாரம் தோண்டுவது, உயரமான இடங்களில் செய்யப்படும் வேலைகள் ஆகியவற்றை ‘ரோபோக்கள்’ எளிதில் செய்கின்றன. ஒரே மாதிரியான வேலைகள், அதிக பரப்பில் அமைக்க வேண்டிய கான்கிரீட் வேலைகள், அதிக எடைகளை கையாண்டு செய்யப்படும் கட்டுமான வேலைகள் போன்றவற்றை செய்ய இவை சிறந்தவை.

மேலும் செய்திகள்