சரக்கு சேவை வரியில் மறுபரிசீலனை
ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு சேவை வரியால் அரசுக்கு கணிசமான வருமானம் கிடைக்கும்.
ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு சேவை வரியால் அரசுக்கு கணிசமான வருமானம் கிடைக்கும். பல பொருட்களுக்கு, சேவைகளுக்கு வரிகள் குறையும் என்றாலும், பொதுமக்கள், தொழிலாளர்களை பாதிக்கக்கூடிய பல இனங்களில் வரிகள் அதிகமாக போடப்பட்டிருப்பதால், எல்லோருடைய தினசரி செலவும், மாதாந்திர பட்ஜெட்டும் கணிசமாக உயர்ந்து விட்டது. தமிழக மக்களுக்கு பொழுதுபோக்கான சினிமா டிக்கெட்டுகளுக்கு 100 ரூபாய்க்கு மேல் உள்ள டிக்கெட்டுக்கு 28 சதவீதம், அதற்கு குறைவான டிக்கெட்டுக்கு 18 சதவீதம் என்ற வரிவிதிப்பை எதிர்த்து திரைப்பட உலகினர் குரல் எழுப்பினர்.
மேலும் தமிழக அரசு சார்பில் சினிமா டிக்கெட்டுகளுக்கு விதிக்கப்படும் 30 சதவீத கேளிக்கை வரியையும் சேர்த்து 58 சதவீத வரி என்றால், அந்தச் சுமையை படம்பார்க்க செல்லும் சாதாரண குடிமக்கள்தான் தாங்க வேண்டியது இருக்கும். இந்த வரிச்சுமையை எதிர்த்து கடந்த 4 நாட்களாக தமிழ்நாட்டில் உள்ள 1,127 தியேட்டர்களும் மூடிக்கிடந்தன. பொதுமக்களுக்கு பெருமளவில் இதன் பாதிப்பு தெரியாததன் காரணம், இப்போது டெலிவிஷனில் விடிய விடிய சினிமா காட்டப்படுகிறது. செல்போனிலும், டேப்லெட்டுகளிலும், லேப்–டாப்களிலும் படம் பார்க்கும் வசதி இருக்கிறது. 28 சதவீத சரக்கு சேவை வரியால், சினிமா தொழிலை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் பாதிப்படைந்து இருக்கிறார்கள். அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சினிமா டிக்கெட் கட்டண உயர்வுக்கு அனுமதித்து கேளிக்கை வரி தொடர்பாக முடிவெடுக்க சினிமா தொழில் தரப்பினர் 8 பேரையும், அரசு அதிகாரிகளையும் கொண்ட குழுவை அமைக்க எடுக்கப்பட்டுள்ள முடிவை அடுத்து போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது. இதுபோல, தீபாவளி அடுத்த சில மாதங்களில் வரஇருக்கும் நிலையில், சிவகாசியில் பட்டாசு தொழில் முழுவீச்சில் நடக்க வேண்டிய காலம் இது. பட்டாசுக்கும் 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 800 பட்டாசு ஆலைகள் 6 நாட்களாக மூடப்பட்டு கிடந்தன. ஏறத்தாழ 10 லட்சம் தொழிலாளர்கள் வேலையில்லாமல், அன்றாட கூலி கிடைக்காமல் வறுமையில் வாடினர். இப்போது அரசாங்கம் சொல்லிய உறுதிமொழியை ஏற்று நேற்று முதல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தீப்பெட்டி தொழிற்சாலைகளும் சரக்கு சேவை வரியை எதிர்த்து மூடிக்கிடக்கின்றன. தீப்பட்டி தொழிற்சாலைகளுக்கு சப்ளை செய்யும் வகையில் பெண்கள் வீடுகளில் இருந்தே கட்டையில் தீக்குச்சி அடுக்குதல், பசையை வைத்து தீப்பெட்டி செய்தல் போன்ற தொழிலில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கும் தொழில் இது.
குடிசை தொழிலாக உள்ள கடலைமிட்டாய் தயாரிப்பும் 18 சதவீத சரக்கு சேவை வரிக்கு உள்ளாகிவிட்டது. கடலைமிட்டாய் தயாரிக்கும் தொழிலில் பெரிய தொழிற்சாலைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். மற்றபடி கையால்தான் நிலக்கடலையையும், வெல்லத்தையும் வைத்து கடலை மிட்டாய் தயாரிக்கப்படுகிறது. சாதாரண ஏழை–எளிய மக்கள் வாங்கிச் சாப்பிடும் ஒரு இனிப்பு என்றால் அது கடலைமிட்டாய்தான். அதற்கு 18 சதவீதம் வரி என்றால், நிச்சயமாக அதன் விலையும் உயரும். இதுபோல, ஜவுளித்தொழிலுக்கும் 18 சதவீதம் வரை சரக்கு சேவை வரி விதிக்கப்படுவது அந்த தொழிலையும் பெரிதும் பாதித்துள்ளது. 1–ந்தேதியில் இருந்து பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது, பொதுமக்களுக்கு வலியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சரக்கு சேவை வரி அமலுக்கு வந்துவிட்டாலும், வியாபாரிகள், பொதுமக்கள், உற்பத்தியாளர்கள் என்று எல்லா தொழிலிலும் உள்ளவர்களையும் தமிழக அரசு அழைத்து யார்–யார்?, என்னென்ன பாதிப்பு அடைந்திருக்கிறார்கள்? என்று பட்டியலிட்டு, ஆகஸ்டு 5–ந்தேதி நடக்கும் சரக்கு சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் பேசி, நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கோரிக்கையாக இருக்கிறது.