துடுப்பதி துலுக்கபாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

துடுப்பதி துலுக்கபாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2023-03-04 21:23 GMT

பெருந்துறை

துடுப்பதி துலுக்கபாளையத்தில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தார்கள்.

மகாசக்தி மாரியம்மன்

பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதி துலுக்கபாளையத்தில் மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றன. இதையடுத்து நேற்று முன்தினம் மகாசக்தி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக விநாயகர் வழிபாட்டுடன் விழா தொடங்கியது. அதன்பின்னர் பல்வேறு யாக பூஜைகள் நடத்தி கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள தடத்துப்பிள்ளையார், செல்வ விநாயகர் கோவிலிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அன்னதானம்

துரைசாமி குருக்கள் தலைமையிலான அர்ச்சகர்கள், 4 கால பூஜை நடத்தி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்கள்.

விழாவையொட்டி கருவறையில் உள்ள மகாசக்தி மாரியம்மன், தடத்துப்பிள்ளையார், செல்வவிநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

பெருந்துறையை சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் துலுக்கபாளையம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்