இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

வாஸ்து செய்ய நன்று. கோவை பாலதண்டாயுதபாணி கோவில் தெப்பத் திருவிழா.

Update: 2024-01-26 01:30 GMT

இன்றைய பஞ்சாங்கம் :

சோபகிருது வருடம் தை மாதம் 12-ந் தேதி வெள்ளிக்கிழமை,

திதி: பிரதமை திதி இரவு 1.01-க்கு மேல் துவிதியை திதி,

நட்சத்திரம்: பூசம் நட்சத்திரம் காலை(10.29)க்கு மேல் ஆயில்யம் நட்சத்திரம்.

யோகம்: மரண யோகம்,மேல்நோக்குநாள்.

ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

எமகண்டம்: மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள் :

வாஸ்து செய்ய நன்று. குடியரசு தினம். நெல்லையப்பர் சவுந்திரசபா நடனம். கோவை பாலதண்டாயுதபாணி கோவில் தெப்பத் திருவிழா. பழனி ஸ்ரீமுருகப்பெருமான் தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடு. சென்னை ஸ்ரீசிங்காரவேலவர் கோவில் மற்றும் திருமயிலை கபாலீஸ்வரர் கோவில்களில் தெப்ப உற்சவம்.

இன்றைய ராசிபலன் :

மேஷம்: பிரபலஸ்தர்களை சந்தித்து மகிழும் நாள். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு வித்திடும்.

ரிஷபம்: தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும் நாள். பழைய பாக்கிகள் வசூலாகும். நட்பு வட்டம் விரிவடையும். உத்தியோகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் கைகூடிவரும்.

மிதுனம்: பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். பணிகளை சிறப்பாக செய்து குடும்ப பெரியவர்களின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

கடகம்: நாலாபுறமும் இருந்து நல்ல செய்தி வந்து சேரும் நாள். இல்லத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறுவதற்கான அறிகுறி தென்படும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் சொல்லுக்கு மதிப்பு கொடுப்பர். பொதுவாழ்வில் புகழ்கூடும்.

சிம்மம்: வெற்றி வாய்ப்புகள் வீடு வந்து சேரும் நாள். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். இடம் வாங்குவதில் இருந்த இடையூறு அகலும்.

கன்னி: இனிமையான நாள். இல்லம் தேடி நல்ல செய்தி வந்து சேரும். வேகத்துடனும், விவேகத்துடனும் செயல்படுவீர்கள். பணியாளர்களுடன் இருந்த பணிப்போர் விலகும். வரவு திருப்தி தரும்.

துலாம்: கொடுத்த தொகை குறிப்பிட்டபடி வந்துசேரும் நாள். குழப்பங்கள் அகலும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். வருமானம் திருப்தி தரும். வியாபார விரோதம் விலகும்.

விருச்சிகம்: பொது வாழ்வில் புகழ் கூடும் நாள். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்பர். சமூக பணியில் அக்கறை காட்டுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

தனுசு: யோசித்து செயல்பட வேண்டிய நாள். வரவை காட்டிலும் செலவு கூடும். முன்கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. தொழிலில் கவனம் தேவை.

மகரம்: எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். எதிரிகள் விலகுவர். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டை சீரமைப்பதில் அக்கறை கூடும். தொழில் போட்டிகள் அகலும்.

கும்பம்: வம்பு வழக்குளை சமாளித்து வளம் காணும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மாற்று மருத்துவம் உடல்நலத்தை சீராக்கும். பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

மீனம்: அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாள். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்கும் அமைப்பு உருவாகும். அலைபேசி வழித்தகவல் ஆச்சரியம் தரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.

சந்திராஷ்டமம்: தனுசு.

Tags:    

மேலும் செய்திகள்