இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

குன்றக்குடி ஸ்ரீமுருகப்பெருமான் வெள்ளி கேடயத்தில் பவனி வரும் காட்சி. நெல்லை நெல்லையப்பர் புறப்பாடு.

Update: 2024-01-18 02:17 GMT

இன்றைய பஞ்சாங்கம் :

சோபகிருது ஆண்டு, தை 4-ந் தேதி (வியாழக்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: சப்தமி அதிகாலை 3.16 மணி வரை பிறகு அஷ்டமி

நட்சத்திரம்: ரேவதி காலை 8.31 மணி வரை பிறகு அஸ்வினி

யோகம்: சித்த, அமிர்தயோகம்

ராகுகாலம்: மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம்: தெற்கு

நல்ல நேரம்: காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை மற்றும் 12.30 மணி முதல் 1.30 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடு. கோவை ஸ்ரீபால தண்டாயுதபாணி கோவிலில் உற்சவம் ஆரம்பம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் விஸ்வரூப தரிசனம். குன்றக்குடி ஸ்ரீமுருகப்பெருமான் வெள்ளி கேடயத்தில் பவனி வரும் காட்சி. நெல்லை நெல்லையப்பர் புறப்பாடு.

இன்றைய ராசிபலன் :

மேஷம் : பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். உடன்பிறப்புகள் உங்கள் பணிக்கு உறுதுணைபுரிவர். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.

ரிஷபம் : மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். பணம் தரவேண்டியவர்கள் வீடு தேடிவந்து தருவர். கடிதப் போக்குவரத்து கவலையை போக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

மிதுனம் : நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். கூட்டாளிகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

கடகம் :வரவைவிட செலவு கூடும் நாள். வரன்கள் வந்து வாயிற் கதவை தட்டும். தித்திப்பான செய்தி ஒன்று தூரதேசத்திலிருந்து வந்து சேரும். உறவினர்களால் சில பிரச்சினைகள் உருவாகலாம்.

சிம்மம் : நேற்றைய பிரச்சினை இன்று முடிவிற்கு வரும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். கொடுக்கல், வாங்கல்களில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

கன்னி : வளர்ச்சி கூட வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். திடீர் விரயம் உண்டு. குடும்ப உறுப்பினர்களால் விரயம் உண்டு. அலுவலக பணிகளில் யாரையும் நம்பி எதையும் செய்ய இயலாது.

துலாம் : வளர்ச்சி கூடும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். கல்யாண கனவுகள் நனவாகும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

விருச்சிகம் : யோகமான நாள். பணவரவு திருப்தி தரும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நூதன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும் நாள்.

தனுசு : புதிய பாதை புலப்படும் நாள். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள். செய்தொழிலில் லாபம் கிட்டும். செல்வாக்கு உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு.

மகரம் : நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். கரைந்த சேமிப்பை ஈடுகட்ட முற்படுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.

கும்பம் : தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள். சிக்கனத்தை கையாள்வீர்கள். பணியாளர்கள் தொல்லை அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள். உத்தியோக முயற்சி வெற்றி தரும்.

மீனம் : அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். தொலைதூர பயண வாய்ப்புகள் கைகூடும். அலங்கார பொருட்களை வாங்கும் ஆர்வம் ஏற்படும்.

சந்திராஷ்டமம்: காலை 7.57 வரை சிம்மம்; பிறகு கன்னி

Tags:    

மேலும் செய்திகள்