இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
மீன ராசிக்காரர்களுக்கு மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும் நாள்.
இன்றைய பஞ்சாங்கம்:
குரோதி வருடம் சித்திரை மாதம் 17-ந்தேதி செவ்வாய்க்கிழமை.
திதி: சப்தமி திதி இரவு (3.10)க்கு மேல் அஷ்டமி திதி.
நட்சத்திரம்: உத்ராடம் நட்சத்திரம் இரவு(1.43)க்கு மேல் திருவோணம் நட்சத்திரம்.
யோகம்: சித்தயோகம். மேல்நோக்குநாள்.
சூலம்: வடக்கு
ராகுகாலம்: மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
நல்லநேரம்: காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
இன்றைய தினப்பலன்:
மேஷம்: ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வரும் நாள். திறமைகள் பளிச்சிடும். திடீர் தனவரவு உண்டு. தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும். நண்பர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும்.
ரிஷபம்: வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் உதவி கிடைக்கும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் பெறுவீர்கள்.
மிதுனம்: விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீட்டு உறுப்பினர்களிடம் கோபமாகப் பேசிவிட்டுப் பிறகு வருத்தமடைவீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொல்லை தருவதாக அமையும். மருத்துவச்செலவு உண்டு.
கடகம்: பொருளாதார நிலை உயரும் நாள். உடன்பிறப்புகளின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளால் நன்மை உண்டு. குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.
சிம்மம்: வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் நாள். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. தொலைதூரப் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். நேற்று பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும்.
கன்னி: கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்ல விதமாக நடைபெறும். தொழில் ரகசியங்களை சொல்லாதிருப்பது நல்லது.
துலாம்: பொறுமையோடு செயல்பட வேண்டிய நாள். வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களது செயல்பாடுகள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும்.
விருச்சிகம்: கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும். தொலைபேசி வழித்தகவலால் மகிழ்ச்சி ஏற்படும். தொழில் முன்னேற்றம் உண்டு. பெரிய மனிதர்களின் சந்திப்பு கிட்டும்.
தனுசு: காலையில் சலசலசப்பும், மாலையில் கலகலப்பும் ஏற்படும் நாள். மருத்துவச் செலவு உண்டு. கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்துசேரும்.
மகரம்: பக்குவமாகப் பேசிப் பாராட்டுகளைப் பெறும் நாள். புதிய முயற்சிகள் வெற்றி தரும். உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு. பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம். தொழில் வளர்ச்சி உண்டு.
கும்பம்: முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.
மீனம்: வரவு திருப்தி தரும் நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். வாழ்க்கைத் துணை வழியே மகிழ்ச்சி தரும் செய்தியொன்று வந்து சேரும். நீண்ட நாளைய பிரார்த்தனை நிறைவேறும்.
சந்திராஷ்டமம்: காலை (8.25) வரை ரிஷபம்; பிறகு மிதுனம்)