இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
துலாம் ராசிக்காரர்களுக்கு தொட்டது துலங்கும் நாள்.
இன்றைய பஞ்சாங்கம்:
குரோதி வருடம் சித்திரை மாதம் 14-ந்தேதி சனிக்கிழமை.
திதி: திருதியை திதி காலை(7.32)க்கு மேல் சதுர்த்தி திதி.
நட்சத்திரம்: கேட்டை நட்சத்திரம் இரவு(3.20)க்கு மேல் மூலம் நட்சத்திரம்.
யோகம்: சித்தயோகம். சமநோக்குநாள்.
சூலம்: கிழக்கு
ராகுகாலம்: காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை
நல்லநேரம்: காலை 7.30 மணி முதல் 8.00 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
இன்றைய முக்கிய நிகழ்வுகள்:
சங்கடகர சதுர்த்தி. கவலைகள் அகல கணபதியை வழிபட வேண்டிய நாள்.
இன்றைய தினப்பலன்:
மேஷம்: யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். கூட்டாளிகள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்ள மாட்டார்கள். உத்தியோகத்தில் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனமுடன் இருப்பது நல்லது.
ரிஷபம்: தடைப்பட்ட காரியம் தானாக நடைபெறும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வராது என்று நினைத்த பாக்கிகள் வந்து சேரும். உத்தியோகத்தில் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டப்படுவீர்கள்.
மிதுனம்: போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். நண்பர்கள் செய்த உதவியை மறக்காமல் நன்றியுடன் நடந்து கொள்வீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும்.
கடகம்: வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வரவும், செலவும் சமமாகும். வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும். சுபச்செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
சிம்மம்: நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழில் வளர்ச்சியில் இருந்த தொல்லை அகலும். உத்தியோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும்.
கன்னி: திருமண முயற்சி கைகூடும் நாள். தெய்வீகச் சிந்தனை மேலோங்கும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள், விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும்.
துலாம்: தேக்க நிலை மாறித் தெளிவு பிறக்கும் நாள். முக்கியப் புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பர். வீடு, மனை வாங்கப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.
விருச்சிகம்: வளர்ச்சி கூடும் நாள். தொழிலில் வருமானம் உயரும். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். உடன்பிறப்புகளின் உதவி கிட்டும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.
தனுசு: வெற்றிச் செய்திகள் வந்து சேரும் நாள். வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வரன்கள் வாயில் தேடி வரும்.
மகரம்: மனதிற்கினிய சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். மகிழ்ச்சிப் பயணம் உண்டு. மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பணவரவு திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டும் மகிழ்வீர்கள்.
கும்பம்: பம்பரம்போல் சுழன்று பணிபுரியும் நாள். நிர்வாகத் திறமைக்கு பாராட்டுக் கிடைக்கும். நினைத்த நேரத்தில் நினைத்த காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். ஊர்மாற்றங்கள் எதிர்பார்த்தபடி அமையும்.
மீனம்: மனக்குழப்பம் ஏற்படும் நாள். நேற்றைய பிரச்சினை இன்றும் நீடிக்கும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறக் கையிருப்பைக் கரைக்க நேரிடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: இரவு 3.20 வரை மேஷம்; பிறகு ரிஷபம்.