இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கல்யாணம்.

Update: 2024-03-20 01:19 GMT

இன்றைய பஞ்சாங்கம்:

சோபகிருது வருடம் பங்குனி மாதம் 7-ந்தேதி புதன்கிழமை.

திதி: ஏகாதசி திதி இரவு (5.19)க்கு மேல் துவாதசி திதி.

நட்சத்திரம்: பூசம் நட்சத்திரம் இரவு (1.18)க்கு மேல் ஆயில்யம் நட்சத்திரம்.

யோகம்: சித்தயோகம். மேல்நோக்குநாள்.

சூலம்: வடக்கு

ராகுகாலம்: மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: கலை 7.30 மணி முதல் 5.00 மணி வரை

நல்ல நேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

சென்னை மல்லீஸ்வரர் புறப்பாடு. பழனி ஆண்டவர் பவனி. மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கல்யாணம். கன்னி ராசிக்காரர்களுக்கு வளர்ச்சி அதிகரித்து மகிழ்ச்சி கூடும் நாள்.

ராசிபலன்:

மேஷம்

குடும்ப ஒற்றுமை பலப்படும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர் கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.

ரிஷபம்

புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். புதிய பாதை புலப்படும். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். திட்டமிட்ட காரியங்களைத் திட்ட மிட்டபடியே செய்துமுடிப்பீர்கள்.

மிதுனம்

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். நீண்டநாள் நண்பர் ஒருவரின் நட்பு கிடைக்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். குடும்பத்தாருடன் குதூகலப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

கடகம்

வரவைக் காட்டிலும் செலவு கூடும் நாள். வாகனப் பழுதுகளால் வாட்டம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மம்

எதிர்பாராத தனலாபம் இல்லம் தேடி வரும் நாள். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் நட்பு ஏற்படும். தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி லாபத்தைப் பெருக்குவீர்கள்.

கன்னி

வளர்ச்சி கூடும் நாள். கொள் கைப்பிடிப்போடு செயல்படுவீர்கள். வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சிக்கு வழிபிறக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.

துலாம்

சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். ஆடை, ஆபாரணப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் சீராக நடைபெறும். பயணங்களால் பலன் கிடைக்கும்.

விருச்சிகம்

நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். பொருளாதார நிலம் உயர்த்தப் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.

தனுசு

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள் அருகில் உள்ளவர்களால் அமைதிக்குறைவு ஏற்படலாம். மனக் குழப்பம் அதிகரிக்கும். மக்கள் செல்வங்களால் விரயம் உண்டு. உத்தியோகப் பிரச்சினை நீடிக்கும்.

மகரம்

உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். கடன் பிரச்சினைகளை சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும். மரியாதையும் உயரும். வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும்.

கும்பம்

எண்ணங்கள் எளிதில் நிறை வேறும் நாள். ஏற்றுக்கொண்ட செயலை எளிதில் முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் உண்டு.

மீனம்

விரோதிகள் விலகும் நாள். வீண் பழிகள் அகலும், மாற்றினத்தவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு கைகொடுத்து உதவுவர். தாய்வழி ஆதரவு உண்டு. வருமானம் போதுமானதாக இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்