திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள முதுமொத்தன்மொழி, ஆனைகுடி பிறவி பெருமாள் ஐயன் கோவில் கொடைவிழா 4 நாட்கள் நடந்தது. விழா நாட்களில் கணபதி ஹோமம், திருவிளக்கு பூஜை, வில்லிசை, புஸ்ப அலங்கார பூஜை, சிறப்பு அலங்கார பூஜை, சமய சொற்பொழிவு, பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம், பக்தி இன்னிசை கச்சேரி, சங்கிலி பூதத்தார் படைப்பு பூஜை, அன்னதானம், வாணவேடிக்கை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு குலதெய்வ வழிபாடு செய்தனர்.