பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா
பாபநாசம் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
பாபநாசம்;
பாபநாசம் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா நடந்தது. விழாவையொட்டி காப்பு கட்டுதல் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பால்குட ஊர்வலம் நடந்தது. முன்னதாக பாபநாசம் குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து பக்தர்கள் சக்தி கரகம், பால்குடம், காவடி, அக்னிச்சட்டி சுமந்து கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.