மகாபாரத போர் வியூகங்கள்
போரில் வியூகம் என்பது போர்ப் படைகளின் யுத்த அமைப்புகளைக் குறிக்கும். இந்த அமைப்பானது, பல்வேறு தோற்றங்களில் இருக்கும்.
நம் நாட்டில் உள்ள இரண்டு இதிகாசங்களில் ஒன்று, மகாபாரதம். இந்த நூலைப் பற்றி பேசும் போது, அதில் வரும் குருசேத்திரப் போரைப் பற்றி வியக்காமல் இருக்க முடியாது. 18 நாட்கள் நடைபெற்ற அந்தப் போர், பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே நடைபெற்றது. அதில் ஒரு சிலரே எஞ்சினர். இந்த போரின் போது பலவிதமான யுத்த வியூகங்கள் கையாளப்பட்டு இருக்கிறது. வியூகம் என்பது போர்ப் படைகளின் யுத்த அமைப்புகளைக் குறிக்கும். இந்த அமைப்பானது, பல்வேறு தோற்றங்களில் இருக்கும். அந்த யுத்த வியூகங்களின் பெயர்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
* நாரை வியூகம்
* முதலை வியூகம்
* ஆமை வியூகம்
* திரிசூல வியூகம்
* சக்கர வியூகம்
* பூத்த தாமரை வடிவ வியூகம்
* கருட வியூகம்
* கடல் அலைகள் போன்ற வியூகம்
* வான் மண்டல வியூகம்
* வஜ்ராயுத (இடிமுழக்கம் போன்ற) வியூகம்
* பெட்டி அல்லது வண்டி போன்ற வியூகம்
* அசுர வியூகம்
* தேவ வியூகம்
* ஊசி போன்ற வியூகம்
* வளைந்த கொம்புகள் போன்ற வியூகம்
* பிறை சந்திர வடிவ வியூகம்
* பூ மாலை போன்ற வியூகம்