இந்த வார விசேஷங்கள்: 12-3-2024 முதல் 18-3-2024 வரை
மார்ச் 16ம் தேதி சனிக்கிழமை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு நடைபெறுகிறது.
12-ந் தேதி (செவ்வாய்)
* காரைக்குடி முத்லூரி அம்மன் கோவிலில் காப்பு கட்டும் விழா தொடக்கம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* குரங்கணி முத்துமாலை அம்மன் பவனி வருதல்.
* சமநோக்கு நாள்.
13-ந் தேதி (புதன்)
*திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு கண்டருளல்.
*மிலட்டூர் விநாயகப் பெருமான் பவனி.
* சமநோக்கு நாள்.
14-ந் தேதி (வியாழன்)
* காரடையான் நோன்பு.
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.
*திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை
* திருப்போரூர் முருகப் பெருமான் பால் அபிஷேகம்.
*கீழ்நோக்கு நாள்.
15-ந் தேதி (வெள்ளி)
* நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் பங்குனி உற்சவம் ஆரம்பம்.
*திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
*திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவள்ளி தாயார் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
16-ந் தேதி (சனி)
* திருநெல்வேலி கரிய மாணிக்க பெருமாள் கோவில் ரத உற்சவம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு.
* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள், இரவு சேஷ வாகனத்தில் பவனி.
* மேல்நோக்கு நாள்.
17-ந் தேதி (ஞாயிறு)
*திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்கக் குதிரையில் பவனி.
* திருச்சி தாயுமானவர் கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு.
* காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சுவாமி, காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் வீதி உலா.
*மதுரை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் இரவு கருட வாகனத்தில் பவனி.
18-ந் தேதி (திங்கள்)
* ராமகிரிப்பேட்டை கல்யாண நரசிம்ம பெருமாள் கோவில் விழா தொடக்கம்.
* பரமக்குடி முத்தாலம்மன் கிளி வாகனத்தில் பவனி.
*திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வெள்ளி பூத வாகனத்தில் புறப்பாடு.
* திருப்புல்லாணி ஜெகந்நாதப் பெருமாள் சிம்ம வாகனத்தில் பவனி.
* மேல்நோக்கு நாள்.