திருவண்ணாமலையில் ஆனி பிரம்மோற்சவ விழா தொடங்கியது

ஆனி பிரம்மோற்சவ விழாவில் இன்று முதல் 10 நாட்களுக்கு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி மாடவீதி உலா நடைபெறும்.

Update: 2024-07-07 10:13 GMT

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கியது. அதிகாலை நடை திறக்கப்பட்டு தங்க கொடிமரத்தின் முன் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள், மேளதாளம் முழங்க கொடியேற்றப்பட்டது. தங்க கொடிமரத்தின் முன் சிறப்பு அலங்காரத்தில், எழுந்தருளிய உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் மற்றும் பராசக்தியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

ஆனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று முதல் 10 நாட்களுக்கு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி மாடவீதி உலா நடைபெறும். 10-ம் நாள் அய்யங்குளக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. கொடியேற்ற விழாவில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், இணை ஆணையர் சி.ஜோதி, மேலாளர் செந்தில் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்