பிரதமர் மோடிக்கு சிறப்பு டி-சர்ட்டை பரிசளித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..!

பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சிறப்பு டி-சர்ட்டை பரிசளித்தார்.

Update: 2023-06-24 00:12 GMT

வாஷிங்டன்,

இந்திய பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு, வர்த்தகம் உள்பட பல்வேறு ஒப்பந்தங்கள் இந்த சந்திப்பின் போது கையெழுத்தாகியுள்ளது.

இதனிடையே, அமெரிக்க பயணத்தின் போது வெள்ளைமாளிகையில் அமெரிக்க-இந்திய தொழிலதிபர்கள், பெரு நிறுவனங்களின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பங்கேற்றார்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏஐ - செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) குறித்த பிரதமர் மோடியின் மேற்கொள் அச்சிடப்பட்ட டி-சர்ட்டை பரிசாக வழங்கினார். பிரதமர் மோடி, தனது வரலாற்று சிறப்புமிக்க அமெரிக்க காங்கிரஸ் உரையில், அமெரிக்கா மற்றும் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவின் முக்கியமான வளர்ச்சியை பாராட்டினார்.

கடந்த ஏழு ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, ஆனால் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்பை ஆழப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு அப்படியே உள்ளது. ஏஐ (செயற்கை நுண்ணறிவு) சகாப்தத்தில், மற்றொரு ஏஐ (அமெரிக்கா-இந்தியா) அதிக முன்னேற்றங்களைக் கண்டுள்ளது" என்று கூறியிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்