இங்கிலாந்தில் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மையம் விரைவில் தொடங்கப்படும் - பிரதமர் ரிஷி சுனக்

இங்கிலாந்தில் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மையம் விரைவில் தொடங்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-26 19:26 GMT

Image Courtacy: AFP

லண்டன்,

அறிவியல் வளர்ச்சியின் பலனாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்பு மற்றும் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் சைபர் தாக்குதல், ராணுவ ரகசியங்கள் திருட்டு, டிஜிட்டல் கொள்ளை போன்றவை அரங்கேறும் வாய்ப்புகள், அச்சுறுத்தல் நிலவுகிறது. இதனை தடுக்கும் வகையில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் சைபர் பாதுகாப்புக்கென புதிய படைகளை உருவாக்கி வருகிறது. தொழில்நுட்ப வல்லுனர்கள், ஹேக்கர்கள் ஆகியோர் கொண்ட இந்த படை குறிப்பிட்ட நாடுகளுக்கு எதிரான சைபர் ஊடுருவலை தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவர். உலகநாடுகளு்ம் இந்த சைபர் பாதுகாப்பில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.

இந்தவகையில் லண்டனில் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு உச்சி மாநாடு நடக்க உள்ளது. உலக நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்க உள்ள நிலையில் மாநாட்டை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஏற்பாடு செய்துள்ளார். இதற்கிடையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை (ஏ.ஐ) சோதனை செய்யும் வகையில் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மையத்தை இங்கிலாந்தில் விரைவில் நிறுவ உள்ளதாக பிரதமர் ரிஷி சுனக் அறிவித்தார். இதனால் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் புதிய ஆபத்துகள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் ஆகியவை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்