'இடி விழுந்தால் கூட தாக்குதல் என்பார்கள்' - தென்கொரியாவுக்கு வடகொரியா பதிலடி

வெடிப்பொருட்களின் சத்தத்தை தாக்குதல் என்று தென்கொரியா தவறாக கணித்துவிட்டதாக கிம் யோ ஜாங் கூறியுள்ளார்.

Update: 2024-01-07 09:06 GMT

Image Courtesy : AFP

பியாங்யாங்,

தென்கொரியாவின் யோன்பியாங் தீவுப்பகுதியை நோக்கி, வடகொரியா திடீர் தாக்குதல் நடத்தியதாக தென்கொரிய ராணுவம் குற்றம்சாட்டியது. இதனால் தீவில் வசிக்கும் மக்களை இடம்பெயருமாறு உத்தரவிட்டுள்ளதாக தென்கொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தென்கொரியாவின் குற்றச்சாட்டை வடகொரியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து வடகொரிய அதிபர் கிம் ஜான் உன்னின் தங்கை கிம் யோ ஜாங் கூறுகையில், "எங்கள் ராணுவம் தென்கொரியான் தீவுப்பகுதி மீது ஒரு முறை கூட சுடவில்லை. ஆனால் எங்கள் ராணுவம் 60 முறை துப்பாக்கியால் சுடுவது போன்ற சத்தத்தை ஏற்படுத்தும் வெடிப்பொருட்களை வெடிக்கச் செய்து, அதன் எதிர்வினையை உற்றுநோக்கியது.

அதன் முடிவு நாம் எதிர்பார்த்தது போலவே இருந்தது. வெடிப்பொருட்களின் சத்தத்தை தாக்குதல் என்று தவறாக கணித்து, வெட்கமின்றி பொய்களை உருவாக்கிவிட்டனர். இனி வருங்காலத்தில், வடக்கு வானில் இடி விழும் சத்தத்தைக் கேட்டால் கூட, அதை வடகொரிய ராணுவத்தின் பீரங்கித் தாக்குதலாக அவர்கள் தவறாக மதிப்பிடுவார்கள்" என்று தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்