உக்ரைன் பெண்களை பலாத்காரம் செய்ய ராணுவ வீரர்களுக்கு வயாகரா கொடுக்கும் ரஷியா- ஐநா பிரதிநிதி

உக்ரைன் பெண்களை பலாத்காரம் செய்ய ரஷியா ராணுவ வீரர்களுக்கு வயாகரா கொடுக்கப்படுவதாக ஐ.நா சிறப்பு பிரதிநிதி குற்றஞ்சாட்டி உள்ளார்.

Update: 2022-10-17 08:01 GMT

வாஷிங்டன்

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி ரஷியா தனது தாக்குதலை தொடங்கியது. ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த போரில் இருதரப்பிலும் மிகப்பெரிய அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த போரில் உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகள் செய்து வருகின்றன.

மேலும் ரஷியாவிடம் போரில் இழந்த சில பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. இதனையடுத்து உக்ரைனுக்கு எதிரான போருக்கு தேவையான ராணுவ படைகளை திரட்ட ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டார்.

இந்த போரில் பாலியல் வன்முறை தொடர்பாக ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதி பிரமிளா பட்டன் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டு உள்ளார். உக்ரைனில் பலாத்காரம் ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறதா என்று கேட்டபோது, "எல்லா அறிகுறிகளும் உள்ளன" என்று அவர் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:-

செப்டம்பரின் பிற்பகுதியில் வெளியிடப்பட்ட ஐ.நா அறிக்கையை குறிப்பிட்டு, படையெடுப்பு தொடங்கியதில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறை வழக்குகளை ஐ.நா பதிவு செய்துள்ளது.பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகள் மட்டுமல்ல, ஆண்களும் சிறுவர்களும் கூட.

"பெண்கள் பல நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். சிறு பையன்களும்,ஆண்களும் பலாத்காரம் செயப்படுகின்றனர்.

தொடர் பிறப்புறுப்பு சிதைவுகளைப் பார்க்கும்போது ரஷ்ய வீரர்கள் வயாகராவை பயன்படுத்துவதாக பாதிக்கபட்ட பெண்கள் சாட்சியமளித்து உள்ளனர். இதுவும் ஒரு இராணுவ உத்தியாக உள்ளது.

ரஷியப் படைகளால் நடத்தபட்ட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை உறுதிப்படுத்தியது, மேலும் சேகரிக்கப்பட்ட சாட்சியங்களின்படி, பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் வயது நான்கு முதல் 82 வயது வரை இருக்கும்.அறிக்கை செய்யப்பட்ட வழக்குகள் ஒரு சிறிதளவு மட்டுமே என்று கூறினார்.

இதற்கிடையில், உக்ரைன் மக்களுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை ரஷியா மீண்டும் மீண்டும் மறுத்துள்ளது, அது பொதுமக்களால் வெளியேற்றப்பட்ட பகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாகக் கூறி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்