வேற்று கிரகத்தில் உலா வரும் ரோபோக்கள்... உண்மை நிலவரம் என்ன..?
வேற்று கிரக அமைப்பை கொண்ட பகுதியில் ரோபோக்கள் உலா வருகின்றன.
ஜெர்மனி,
இந்தக் காட்சிகளைப் பார்த்தவுடன் நமக்குத் தோன்றும் முதல் கேள்வி, இது என்ன சந்திரனா...அல்லது செவ்வாயா...? வேற்று கிரகத்தில் மனிதர்களும் ரோபோக்களும் உலா வருகின்றனவா? என்பது தான். ஆனால் உண்மை அதுவல்ல.
சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தின் அமைப்புடன் ஒத்துப் போகும் தளமானமிகவும் உயிர்ப்பான எட்னா எரிமலையில், கருந்தூசிகளுக்கு மத்தியில் தரிசு நிலத்தில் இந்த ரோபோக்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.
இவ்விரு கிரகங்களிலும் விண்வெளி வீரர்கள் எதிர்கால பயணங்களின் போது எதிர்கொள்ளும் சூழலை ஆராயும் முயற்சியாக இந்த ரோபோக்களை ஜெர்மனி விண்வெளி நிறுவனம் எரிமலையில் உலவ விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.