ஆப்கானிஸ்தான்: குருத்வாரா மீது பயங்கரவாத தாக்குதல்; ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்பு

முகமது நபிகள் குறித்த பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தாக்குதல் நடத்தியதாக ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2022-06-19 09:19 GMT

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கிய குருத்வாரா உள்ளது. இங்கு நேற்று காலை 30 பேர் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 பேர் பலியானதாகவும் 7 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சீக்கியர்கள், இந்துக்கள் 100 பேருக்கு விரைவாக இ.விசா வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முகமது நபிகள் குறித்த பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இந்துக்கள், சீக்கியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்