2022 இறுதியில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி சரிவடையும் - பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு தகவல்

போர், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் உலகளாவிய அளவில் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-30 15:39 GMT

பாரிஸ்,

உலகளாவிய பொருளாதார வளர்ச்சி முன்பு கணிக்கப்பட்டதை விட கணிசமான அளவில் சரிவடைந்து வருவதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 2022 இறுதியில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி சரிவடையும் என்றும், 2023-ல் வளர்ச்சி விகிதம் வெறும் 2.2% ஆக இருக்கும் என்றும் அந்த அமைப்பு கணித்துள்ளது.

பாரிஸ் நகரை தலைமையாக கொண்ட இந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரஷியா-உக்ரைன் போர், சர்வதேச அளவிலான பணவீக்கம், எரிசக்தி தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் உலகளாவிய அளவில் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023-ம் ஆண்டில் வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது அமெரிக்காவில் 0.5% ஆகவும், ஐரோப்பிய நாடுகளில் 0.25% ஆகவும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 2023-ம் ஆண்டில் மிகக் கடுமையான எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்