தைவான் அதிபர் தேர்தலில் போட்டி: பாக்ஸ்கான் நிறுவனத்தில் இருந்து உரிமையாளர் விலகல்

தைவான் அதிபர் தேர்தலில் போட்டியிட பாக்ஸ்கான் நிறுவனத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக உரிமையாளர் டெர்ரி கோவ் கூறியுள்ளார்.

Update: 2023-09-03 16:50 GMT

மின்னணு பொருட்கள் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமான பாக்ஸ்கான் தைவானை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. ஆப்பிள், அமேசான் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு தேவையான மின்னணு பொருட்களை இந்நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. கடந்த 1974-ம் ஆண்டு டெர்ரி கோவ் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனத்துக்கு சீனாவிலும் பெருமளவிலான உற்பத்தி உள்ளது. இதற்கிடையே கடந்த 2019-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலுக்காக பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் பதவியை டெர்ரி கோவ் ராஜினாமா செய்தார். ஆனால் அங்குள்ள பிரதான எதிர்க்கட்சியான தேசியவாத கட்சியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை.

இந்தநிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தைவானில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தான் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட போவதாக கடந்த மாதம் 28-ந்தேதி டெர்ரி அறிவித்திருந்தார். அதன்படி பாக்ஸ்கான் நிறுவனத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அவர் கூறியுள்ளார். இவர் சீன ஆதரவு கொள்கை கொண்டவர் ஆவார். தற்போது இரு நாடுகளுக்கும் இடையே போர்ப்பதற்றம் நிலவி வரும் நிலையில் டெர்ரி அதிபர் தேர்தலில் போட்டியிடுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்