வெளிநாட்டு மாணவர்களின் விசாவை ரத்து செய்ய முடிவு - டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக 17 மாகாணங்கள் வழக்கு

வெளிநாட்டு மாணவர்களின் விசாவை ரத்து செய்ய எடுத்த முடிவுக்கு டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக 17 மாகாணங்கள் வழக்கு தொடர்ந்தன.

Update: 2020-07-14 21:45 GMT
வாஷிங்டன், 

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவாதால் அங்குள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறியுள்ளன.

குறிப்பாக உலகப் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகம் இலையுதிர் காலத்து அனைத்து வகுப்புகளையும் ஆன்லைனில் நடத்தப்போவதாக அண்மையில் அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி பாடம் நடத்தினால் அவற்றில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாக்கள் ரத்து செய்யப்படும் என்று உத்தரவு பிறப்பித்தது.

அமெரிக்க அரசின் இந்த முடிவுக்கு அங்குள்ள கல்வி நிறுவனங்களும், கல்வியாளர்களும் கடும் ஆட்சேபனை தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்து என்ற டிரம்ப் நிர்வாகத்தின் அறிவிப்புக்கு எதிராக அமெரிக்காவின் 17 மாகாணங்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. மாசூசெட்ஸ் மாகாணத்தின் அரசு வக்கீல் தலைமையில் 17 மாகாணங்கள் மற்றும் கொலம்பியா மாவட்டத்தின் அரசு வக்கீல்கள் ஒன்று சேர்ந்து டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர்.

இதுதொடர்பாக 18 வக்கீல்களும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் “அமெரிக்கா முழுவதும் மரணம் மற்றும் பிற பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா தொற்றுக்கு மத்தியில் சர்வதேச மாணவர்களை வெளியேற்றுவதற்கான இந்த திடீர் நடவடிக்கை சட்ட விரோதமானது மற்றும் கொடூரமானது” என தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்