ஜோ பிடன், பராக் ஒபாமா, பில் கேட்ஸ் உள்பட பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன
பிட்காயின் ஊழலில் ஜோ பிடன், பராக் ஒபாமா, பில் கேட்ஸ் டுவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாஷிங்டன்
கலைஞர்கள் தொழில்நுட்ப நிபுணர்கள், அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய நிறுவனங்களின் டுவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன.
பராக் ஒபாமா, ஜோ பிடன், மைக் ப்ளூம்பெர்க் மற்றும் அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மாஸ்க் உள்ளிட்ட பல தொழில்நுட்ப பில்லியனர்களின் இதில் அடங்கும். பிட்காயின் முகவரிக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு $ 1,000 டாலருக்கும் 2,000 டாலர்கள் அனுப்புவதாக போலி டுவீட்டுகள் அதில் இருந்து வந்தன.
பலரின் ஸ்கிரீன் ஷாட்களைப் எடுக்க முடிந்த போதிலும், போலி டுவீட்டுகள் அனைத்தும் விரைவாக நீக்கப்பட்டன.
டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்யப்பட்டது குறித்து அறிந்திருப்பதாக டுவிட்டர் ஒரு அறிக்கையை வெளியிட்டது. நிறுவனம் அதை விசாரித்து அதை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியது, விரைவில் ஒரு புதுப்பிக்கப்படும் என உறுதிப்படுத்தியது.
டுவிட்டரில் பல்லாயிரக்கணக்கான பாலோவர்களை கொண்ட உலகின் 10 பணக்காரர்களில் பெசோஸ், கேட்ஸ் மற்றும் எலோன் மாஸ்க் ஆகியோர் உள்ளனர்.