நேபாள பிரதமருக்கு ஆளும் கட்சியில் கடும் எதிர்ப்பு இன்று மாலை ராஜினாமா செய்கிறார்...?

இந்தியாவுடனான பிரச்சினையால் நேபாள பிரதமருக்கு ஆளும் கட்சியில்கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது அதனால் இன்று மாலை ராஜினாமா செய்வார் என தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-07-04 06:04 GMT
புதுடெல்லி: 

இந்தியாவின் சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்திரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுடன் 1,850 கி.மீ. எல்லையை நேபாளம் பகிர்ந்து கொள்கிறது. இரு நாடுகளும் உறுதியான பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளன. இந்தியா நேபாளத்தின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது.

இரு நாடுகளும் எல்லையைத் தாண்டி மக்களை சுதந்திரமாக நகர்த்துவதற்கான நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. தற்போது, நேபாளத்தைச் சேர்ந்த சுமார் 32,000 கோர்கா வீரர்கள் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே பாரம்பரியமான நட்புறவு தொடர்ந்து வந்தாலும், பல தசாப்தங்களாக எல்லை பிரச்சினையும் நிலவி வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் லிபுலேக், காலாபனி, லிம்பியதுரா பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் உரசல் போக்கு தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு காரணம் இந்தியாவின் ஆட்சேபத்தை பொருட்படுத்தாமல் லிபுலேக், காலாபானி, லிம்பியதுரா பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்டது

தொடர்ந்து நேபாள பிரதமர் இந்தியாவுக்கு எதிராகவும் பேசி வந்தார். இந்த நிலையில்  இந்தியா தனது ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக, நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி  குற்றஞ்சாட்டி பேசினார். காட்மாண்டுவில் ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், தனது ஆட்சியை கவிழ்ப்பதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுவதாகவும் கூறினார்.

இந்த நிலையில் நேபாளத்தில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது எனவும், சொந்த கட்சிக்குள் பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கு எதிராக குரல் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்தியாவுக்கு எதிரான சமீபத்திய கருத்துக்கள் அரசியல் ரீதியாக சரியானவை அல்ல, இராஜதந்திர ரீதியில் பொருத்தமானவை அல்ல என்று ஆளும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் உணர்ந்ததால், ஜூன் 30 அன்று உயர் என்சிபி தலைவர்கள் பிரதமர் ஒலியை  பதவி விலக வேண்டும் என்று கோரினர்.

இதற்கிடையில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமான நிலைக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது, அங்கு கே.பி. ஓலியின் தலைவிதி தீர்மானிக்கப்படும். 

ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் (என்சிபி) வளர்ந்து வரும் விரிசல்களுக்கு மத்தியில், நேபாள பிரதமர் கே.பி. ஓலி சனிக்கிழமை இன்று ராஜினாமாசெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் இன்று மாலை 4 நாட்டு மக்களுக்கு உரையாற்ற வாய்ப்புள்ளது.

மேலும் செய்திகள்