கொரோனா பாதிப்பு: நான் சீனா மீது மேலும் மேலும் கோபப்படுகிறேன்- டொனால்டு டிரம்ப்
தொற்றுநோய் அதன் அசிங்கமான முகத்தை உலகம் முழுவதும் பரப்புவதை நான் பார்க்கும்போது நான் சீனா மீது மேலும் மேலும் கோபப்படுகிறேன் என டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 26 லட்சத்தை தாண்டி உள்ளது. அமெரிக்க தொற்று நோய் நிபுணர் அந்தோனி பாசி கொரோனா பாதிப்பு நடவ்டிக்கையில் நாம் தவறான திசையில் சென்று கொண்டிருக்கிறோம். இப்போது நாம் முழுமையான கட்டுப்பாட்டில் இல்லை" என்றும் கூறினார்.
இதை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தொற்றுநோயை முழுமையாக கட்டுப்படுத்தவில்லை என்று எச்சரித்துள்ளனர்.
"தொற்றுநோய் அதன் அசிங்கமான முகத்தை உலகம் முழுவதும் பரப்புவதை நான் பார்க்கும்போது, அது அமெரிக்காவிற்கு செய்துள்ள பெரும் சேதம் உட்பட அனைத்திற்கும் நான் சீனா மீது மேலும் மேலும் கோபப்படுகிறேன் என கூறி உள்ளார்.
As I watch the Pandemic spread its ugly face all across the world, including the tremendous damage it has done to the USA, I become more and more angry at China. People can see it, and I can feel it!
— Donald J. Trump (@realDonaldTrump) June 30, 2020