திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ப.சிதம்பரம் வாழ்த்து
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 160 தொகுதிகளில் முன்னிலை பெற்று தனது வெற்றியை உறுதி செய்துள்ளது. இதனால் திமுக ஆட்சி அமைவது உறுதியாகி விட்டது.
இதனையடுத்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். பிரதமர் மோடி மற்றும் பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் மிகுந்த மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளிக்கின்றன. திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 3-ல் 2 பங்கு இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.
புதிய அரசை அமைக்கவிருக்கும் தி மு கழகத்திற்கும், அதன் தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கும் என் உளங்கனிந்த பாராட்டுதலையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.